"டேய்! காயத்ரிக்கிட்ட பேச மாட்டேன்னு சொன்னியாமே? என்னடா சண்டை உங்களுக்குள்ள?" அம்மா கத்தினாள். " நீ சும்மா இரும்மா. இதுல தலையிடாதே. இப்பவே அடக்கி வச்சாதான் போற இடத்துல ஒழுங்க இருப்பா". அம்மாவை அடக்கினான்.
"இனிமே நான் சண்டை போட மாட்டேன்டா , என்கிட்ட பேசுடா. நீ சாரி கூட கேக்க வேண்டாம்". கெஞ்சினாள் அவள். காதில் விழாதது போலே கிளம்பி சென்றான் அவன்.
சில நாட்களுக்கு பிறகு, நண்பர்களுடன் கல்லூரி சுற்றுலாவில்,
" என்னடா எங்ககிட்டலாம் பேச நேரமே கிடைக்காதா உனக்கு? எப்பவுமே அவ பின்னாடியே சுத்துற" நண்பனிடம் கத்தினான் அவன். " டேய் சத்தமா பேசாதடா. அவ காதுல விழ போகுது" பதறியப்படியே சொன்னான் நண்பன். " கேட்டா கேக்குது. அவளுக்கு என்னமோ பயப்படுற?" மீண்டும் சீண்டினான் அவன்.
"அவனை எதுக்கு இப்போ சீண்டுற? எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரா கேளு?" அவனை மடக்கினாள் அவள். நண்பன் பேசாமல் நின்று கொண்டிருந்தான். " நான் உன்கிட்ட ஒண்ணும் பேச தேவை இல்ல" - அவளிடம் சொல்லிவிட்டு , " பெரிய பருப்பு மாதிரி வந்த்துட்டா" என்று முனும்முனுத்தான். கேட்டுவிட்டது அவளுக்கு. பொங்கிய கண்ணீரை மறைத்து கொண்டே பேருந்தில் சென்று அமர்ந்தாள்.
அன்று இரவு, "டேய் என்னடா நீ.அவகிட்ட போய் அந்த மாதிரியா பேசுவ? . பாவம்டா அவ. " - வருந்தினான் நண்பன். " என்னடா ரொம்ப தான் பரிஞ்சு பேசுற?" - எகத்தாளித்தான் அவன். " இத்தன நாள் நம பழகிருகோம், என்னைவிட அவ தான் பெருசா போய்ட்டால்ல இப்போ" இரக்கமில்லாமல் நட்ப்பென்னும் உரிமையை கொண்டாடினான், அதன் பெருமை தெரியாதவன்.
" டேய் அதுக்கில்லடா ." - பேச வாயேடுத்தவனை அடக்கினான். " உனக்கு நான் வேணுமா இல்ல அவ வேணுமான்னு முடிவு பண்ணிக்கோ" - கர்ஜித்து சென்றான்.
இரண்டு நாட்கள் ஓடியது. வகுப்பறையில் நண்பனும் அவளும் பேசிக்கொள்வதாக தெரியவில்லை. அவனுக்கு உள்ளுர சந்தோஷமாக இருந்தது. என்றாலும் அவர்களை பிரித்தது தப்போ என்று தோன்றியது. நண்பனின் வாடிய முகம் அவனையும் வருத்தியது.
முடிவ்வெடுதவனாய் அவளிடம் சென்றான். " உன்கிட்ட கொஞ்சம் பேசணும். class முடிஞ்சதும் wait பண்ணு." சொல்லிவிட்டு நகர்ந்தான். "டேய் என்னடா பேச போற. இன்னும் எதுவம் குட்டைய்ய குழப்பாத, please. " கெஞ்சினான் நண்பன். அவனை ஒருமுறை உற்று பார்த்துவிட்டு சென்றான் அவன்.
மாலை, அவள் வகுப்பறையில் காத்திருந்தாள். " உனக்கு அவன் எப்படின்னு எனக்கு தெரியாது, ஆனா அவன் எனக்கு more than a friend. I;m bit possesive when it comes to my friendship. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் போய் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனா என்னால அவன் கஷட்டப்படுறதை நான் விரும்பல. நான் எதாச்சும் தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சுடு." சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றான்.
" டேய். thanks -டா. எனக்கு நீங்க இரண்டுப் பேருமே ஒன்னு தான் " நன்றி சொல்லிகொண்டிருந்த நண்பனை புறம் தள்ளி ஏதோ உணர்ந்தவனாய் hostel- லை நோக்கி ஓடினான்.
" Hello! சாரி அக்கா ! "பேச முடியாமல் அழுதான் அவன். "டேய் ஏன்டா அழற ஒண்ணும் இல்லடா ராஜா. விடு நீ தான சண்டை போட்ட. அழாதே. நீ பேசியதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." போனில் சமாதானம் சொன்னாள் அவன் அக்கா.