வாங்கிய புடவையை அம்மாவிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினேன்.
" புடவை நல்ல இருக்குடா !. ரொம்ப விலையோ? "
உண்மையான விலை சொன்னால் அம்மா நிச்சயம் கோபிப்பாள் .
"இல்லம்மா 7000 ரூபா சொன்னான். Discount போட்டு 6500 க்கு கொடுத்தான்", நன்றாக பொய் சொன்னேன்.
"6500 ரூபாவா?. எனக்கெதுகுடா இவ்ளோ விலைல?. மாமா பாரு மாமிக்கு 3000 ருபாய்ல தான் வாங்கிவந்து கொடுத்தான். நல்ல பெரிய ஜரிகை வச்ச புடவைதான். ஆனாலும் விலை ரொம்ப ஜாஸ்தி." அம்மா பொய்யாக கோபித்தாள்.
" சரி சரி யாராச்சும் கேட்டாங்க 3500 ரூபானு சொல்லு. இல்லனா எல்லாரும் மலைப்பா பார்ப்பாங்க. என்ன புரியுதா? " சிரித்துக்கொண்டே மையமாக தலையாட்டினேன் .
மதியம் தீபாவளி பட்சணம் கொடுப்பதற்காக பாட்டி வந்தாள். " இங்க பாரு உன் பேரன் தீபாவளி வாங்கி கொடுத்த gift . எப்படி இருக்கு? " அம்மா பெருமையாக காட்டினாள். " அப்பிடியா? பரவாயில்லையே. நல்ல தான் எடுத்திருகான். எவ்ளோவாம்? " நான் சொல்ல வாயேடுக்கும் முன், அம்மா சொன்னாள், " 6000 ரூபாவாம்". பாட்டி சிரித்துக்கொண்டே, " அப்படியா ! புள்ள நல்ல சம்பாரிக்க ஆரம்பிச்சிடான்." அம்மாவுடனே, " சரி நீ இதை பொய் உன் மருமக கிட்ட சொல்லாதே. அப்புறம் அவ எதாச்சும் நினைச்சிக்க போறா. கேட்டா உன்கிட்ட விலை ஏதும் சொல்லலுனு சொல்லு." பாட்டியும் மையமாக தலையசைதாள்.
சயந்திரமாக வீட்டுக்கு அம்மாவின் friends வந்தார்கள். " என்ன நல்ல கொண்டாடியச்சா? இதுதான் நீ எடுத்த புது புடவையா? நல்ல இருக்கே? எவ்வளவு?" நான் அம்மாவின் பதிலை கேட்க ஆர்வமனேன். " இது பைய்யன் வாங்கிவந்தது. 7500 ரூபாயாம் ." என்னை நான்றாக குழப்பினாள் .
இரவு மாத வீட்டு வாடகை கொடுக்க வந்த குடுத்தினகாரரிடம் , " எப்படி இருந்துச்சு இந்த தீபாவளி ? உங்க பையனோட தலதீபாவளி இல்ல? " என்று கேட்டாள் என் அம்மா.
" ஏதோ போச்சுங்க. அவன் அங்க கிளம்பி போய்ட்டான். நாங்க ரெண்டு பேரு தானே. எதோ பொழுது போகுது. இது தான் உங்க தீபாவளி புடவையா?" என்று அவர்கள் கேட்க.
அம்மா காத்திருந்தவர் போல, " ஆமா தம்பி ( நான தான் :)) வாங்கி வந்தது. 9000 ரூபா " என்று கூறி என்னைப பார்த்தாள்.
நான் மீண்டும் மைய்யாமாக சிரித்தேன், பாகெட்டில் இருந்த பில் தொகையினை நினைத்துக்கொண்டே.
P.S.: This is my first post in Tamil. Thanks to Shyam for sharing the Google Transileration link.
Showing posts with label Festival. Show all posts
Showing posts with label Festival. Show all posts
Friday, November 9, 2007
Wednesday, November 7, 2007
Friday, October 19, 2007
Subscribe to:
Posts (Atom)