எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம். எப்போ ஆரம்பிச்சதுன்னு தெரியல , ஆனா கொஞ்ச நாளா அடிக்கடி வருது. ஒன்னும் இல்லைங்க, நீங்க சினிமா பாட்டு பார்பீங்களா? அதுல வர துணை நடிகைகள் மேல எனக்கு ஒரு கண்ணு. அய்யே ! தப்பா நீனைகாதீங்க, just ஒரு ஆர்வம். பாட்டுல main actors விட்டு இந்த துணை நடிகர்களை தான் நான் ரொம்ப நேரம் watch பண்ணுவேன்.
சில பேர் ரொம்ப நல்லா ஆடுவாங்க. இன்னும் சொல்ல போனா மத்தவங்கள விட நல்லாவே ஆடுவாங்க. For example, இந்த கத்தாழ கண்ணால பாட்டு இருக்குல அதுல வர பொண்ணு சூப்பரா ஆடும். இது மாதிரி ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கேன்.
இவங்களுக்கெல்லாம் ஏன் நிரைய chance கிடைக்க மாட்டேன்குதுனு தெரியல. Moreover, இவங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டமா வேற இருக்கும். திரைல முழுசவும் காட்ட மாட்டாங்க. சம்பளமும் ரொம்ப குறைச்சல். Proper recognition கிடைச்சாலே நம்ப ஆளுங்க பேர்சி மேஞ்சிடுவாங்க. இந்த மாதிரி வர பாதி பொண்ணுங்க வீட்ட விடு சினிமா ஆசைல ஓடிவந்தவங்கள தான் இருப்பாங்க. அவங்க நிலைமை நினைச்சாலே வருத்தமா இருக்கு.
இதே கொஞ்சம் contrast பார்த்த இதே industry ல Rich Girls அப்பிடீனு ஒரு கூட்டமும் இருக்கு. அவங்க normally காலேஜ் போய்ட்டு இருக்கிற பொண்ணுங்களா இருபாங்க. அப்பா அம்மா கொடுக்கிற காசு பத்தலனு இதுவேற தனியா. சொன்ன நம்ப மாட்டீங்க. என்னோட நண்பனோட friend ஒருத்தி (bar ல சந்திச்சனாம்) இந்த மாதிரி ஒரு படத்துல நடிச்சிருக்க (கன்னட படம், பேரு வாய்லயே நுழையல) அவங்க வீட்டுல சண்டை வந்து, பொண்ணு இப்போ வெளிய தங்கி இருக்கு. அவங்க அப்பா பெல்லாரில பெரிய ஆளாம். எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆகிடுச்சேன்னு வருத்ததுலையே போய் சேர்ந்துடாரம். கேக்கவே கஷ்டமா இருந்துச்சு.
************************************************************************************
என்னோட டேமஜர் ஒரு பஞ்சாபி. அவருக்கு தமிழ்நாடில் ஏன் ஹிந்தி தெரியலன்னு கோவம். நான் கேட்டேன், பஞ்சாப்-ல வந்து நான் தமிழ் தெரியுமான்னு கேக்க இல்ல எதிர்பார்க்க தான் முடியும்மா?
இவங்க இங்க வந்து பொழைக்கிரதுக்கு நாம ஹிந்தி கத்துக்கிடனுமாம் . இது கொஞ்சம் ஓவரா தெரியல இவங்களுக்கு?
நீங்க என்ன சொல்லுறீங்க?