Friday, January 25, 2008
Once again musings...
நம்ம பொன்னரசி , சில பல காத்திருப்புகளுக்கு பிறகு கடைசியா இன்னைக்கு வேலைல சேருறாங்க அவங்களுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுகள். ஒழுங்க ஆபீஸ்ல நல்ல புள்ளையா அம்மா கொடுத்த தத்து மம்மு சாப்பிடுகிட்டு, சமர்த்தா போய்ட்டு வரணும். அந்த பொண்ணு கிள்ளுனா, இந்த பையன் ஜடைய புடிச்சு இழுத்தான்னு சொல்லிக்கிட்டு அழுதுகிட்டு இருக்ககூடாது . நல்ல பொண்ணா, அழகா கொடுத்த வேலைய செஞ்சு (அதுவே பெருசு உன் கம்பெனி-ல) நல்ல பேரு எடுக்கணும். அடுத்தவாட்டி ஊருக்கு வரச்சே கிலுகிலுப்பையும், கமர்கட்டும் வாங்கியாறேன். :D
"எந்தன் வானமும் நீ தான் , எந்தன் பூமியும் நீ தான்" பாட்டு கேட்டுருக்கீங்களா? கேட்டு பாருங்க.. சும்மா சூப்பர் மெலடி. வார்த்தைங்க கூட நல்லா இருக்கு. மஹதி , ஹரிசரனும் பாடி இருக்காங்க.
BTW, yenga dabba company-la Blogger again Blocked.... So I can't blog/comment as frequently as earlier (idhuku munadi maatum ozhunga panniyanu keka kudathu :D) Rest in next post...
Saturday, January 19, 2008
Nano - in my view
JANUARY 9 2008 - Another incredible day in the Indian Business world when TATA GROUP unveiled its "People's Car" - TATA NANO on the Auto Expo held here at country capital Delhi. Not only to the surprise of other Indian Industry vetrans, but even the World's big Car Manufacturers' taken aback by the success and determination of TATA. No doubt that Nano has sidelined all the doubts raised by the industry expert on Pollution, Cost and comfort.
What made Ratan Tata to make this "People's Car"?
Basically, just as an Indian, you know, I would be as concerned of my-self as one of the rickshaw pullers in Calcutta running with a rickshaw behind with two people sitting back. It bothered me. My mind will start thinking: Can we put a bicycle there? The same thing bothers me when I visit a plant also. The workers are bending over when the work piece should be raised or maybe they should sit in a pit or what-ever. Because I think human fatigue is something that affects safety.
So in this particular case, you could not help but notice that there were three or four family members on a scooter, the kid standing in the front, the guy driving the scooter and the wife sitting side saddle holding a little kid. And when you're driving a car, you certainly say, Oh my god, be careful, they may slip. Add to that slippery roads and night time too. Any of these reasons can be dangerous for transport. That does not mean that the scooter should not exist because scooters are an evolution of bicycles and it is all the path of prosperity. - ET.
So essentially Tata is projecting this car for a family of four and still commuting in Bike or Scooter. Keeping this mind they had built the car for 632 CC Engine which is efficient enough to drive four adults. As they have not compromised with height, they had still reduced the length of the car to park it easily and again to mention the width has been increased by 6 cm. So no compromise in the comfort.This car is not for long journey, because it was not made with that objective, though Tata Motors claims so.
Nano has many best feature. But on my view, I would not claim it as People's Car. Reasons???
- Though it says it comes for 1 Lakh, that is just the capital cost for the middle class. What about the recurring, variable cost like maintanence and petrol bills? Earlier the 2 Wheelers have to shell petrol bills monthly twice, with Nano they have to do that four times in a month. My average 2W gives 45 kmpl, while Nano can give only 15 kmpl. My variables are more than what I'm paying now. Do you think with growing fuel price, will the middle class able to sustain a car? I don’t think so.
- Lookwise Nano is like "Soorpanagai" without nose. It doesn't give a damn to look & design of the car. Cars traditionally seen as Luxury item and a social status.
- We have seen several business which projects as low price, low cost product manufacturer, but later some point of time, they also join the high price band soon. Air Deccan, Reliance India Mobile etc., It is just like Reliance ka Mobile released for 501 bucks and finally joined the rest of the Telecom band with regular price. Nano will also join 1.5 L or 2L before 2010 due to the impossibility of capping cost structure to 1L.
- Though they had taken lot of pain to built the car small, still I couldn't easily find right infrastructure in the city to park it. Take chennai into consideration, where we have space to park. If I want to use this car in bangalore, I should take it out before 6 am and come back home after 11 pm. The city traffic is not mature enough to hold this kind of car. So to where does this car fit. - Rural India. they don't use car often and they make better sense in using it. It means ultimately its not going to be used by people whom it has been intimated.
Ratanji, we appreciate your product, but unless you are clear about what it has to do and to whom this is not going to help out. But my heartfelt congragulations to Ratan & his team for once again proving our capability to the World.
Thursday, January 17, 2008
31st Chennai Book Fair
வழக்கம் போல ஒவ்வொரு stall ஏறி இறங்கி பிடித்த புத்தகங்களில் தேடி எடுத்து படித்தேன். முதலில் வாங்கிய புத்தகம் தேவனின் ஸ்ரீமன் சுதர்சனம். (அல்லியான்சே பதிபகதர்) . புத்தகத்தை வாங்கி அங்கேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். நடுவில் அங்கேயும் இங்கேயுமாக மக்கள் செல்ல, நான் ஒரு ஓரமாய் கால் வலிக்க நின்று பாதி புத்தகத்தை படித்து முடித்தேன். இதற்கே 45 நிமிடங்கள் ஓடிவிட்டதால், பின்னர் படித்துக்கொள்ளலாம் என்று அந்த புத்தகத்தை வாங்கி வந்தேன்.
கண்காட்சியில் ஒரு வசதி என்னவென்றால், நாம் படிக்கும் புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில புத்தகங்களை நான் அங்கேயே படித்து முடித்துவிடும் அளவுக்கு சிறியவை, அதை வாங்கி கொண்டு போய் என்ன செய்ய? அதனால் நான் ரொம்ப selective.
கிட்டதட்ட 4 மணி நேரம் செலவிட்ட பிறகு சில புத்தகங்களை வாங்கினேன். இதோ என்னோட இந்த வருஷ collection,
18 வது அட்சய கோடு- ஸ்ரீமன் சுதர்சனம்
- அழகர்சமியின் குதிரை
- கள்ளிகாட்டு இதிகாசம்
- அமெரிக்காவில் கிச்சா
- கே ஜி பி
- Autobiography of Gandhi
- சிவமயம்
- ட்விஸ்ட் கதைகள்
என்ன என்னொட collections எப்படி இருக்கு? , உங்களோட collections அனுப்பி வைங்க . அடுத்த வாட்டி போகும் போது மறக்காம வாங்கி படிக்கிறேன்.
Wednesday, January 9, 2008
AWARD-O-PATHY
Friday, January 4, 2008
மனம்விட்டு சில வார்த்தைகள்...
"இனிமே நான் சண்டை போட மாட்டேன்டா , என்கிட்ட பேசுடா. நீ சாரி கூட கேக்க வேண்டாம்". கெஞ்சினாள் அவள். காதில் விழாதது போலே கிளம்பி சென்றான் அவன்.
சில நாட்களுக்கு பிறகு, நண்பர்களுடன் கல்லூரி சுற்றுலாவில்,
" என்னடா எங்ககிட்டலாம் பேச நேரமே கிடைக்காதா உனக்கு? எப்பவுமே அவ பின்னாடியே சுத்துற" நண்பனிடம் கத்தினான் அவன். " டேய் சத்தமா பேசாதடா. அவ காதுல விழ போகுது" பதறியப்படியே சொன்னான் நண்பன். " கேட்டா கேக்குது. அவளுக்கு என்னமோ பயப்படுற?" மீண்டும் சீண்டினான் அவன்.
"அவனை எதுக்கு இப்போ சீண்டுற? எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரா கேளு?" அவனை மடக்கினாள் அவள். நண்பன் பேசாமல் நின்று கொண்டிருந்தான். " நான் உன்கிட்ட ஒண்ணும் பேச தேவை இல்ல" - அவளிடம் சொல்லிவிட்டு , " பெரிய பருப்பு மாதிரி வந்த்துட்டா" என்று முனும்முனுத்தான். கேட்டுவிட்டது அவளுக்கு. பொங்கிய கண்ணீரை மறைத்து கொண்டே பேருந்தில் சென்று அமர்ந்தாள்.
அன்று இரவு, "டேய் என்னடா நீ.அவகிட்ட போய் அந்த மாதிரியா பேசுவ? . பாவம்டா அவ. " - வருந்தினான் நண்பன். " என்னடா ரொம்ப தான் பரிஞ்சு பேசுற?" - எகத்தாளித்தான் அவன். " இத்தன நாள் நம பழகிருகோம், என்னைவிட அவ தான் பெருசா போய்ட்டால்ல இப்போ" இரக்கமில்லாமல் நட்ப்பென்னும் உரிமையை கொண்டாடினான், அதன் பெருமை தெரியாதவன்.
" டேய் அதுக்கில்லடா ." - பேச வாயேடுத்தவனை அடக்கினான். " உனக்கு நான் வேணுமா இல்ல அவ வேணுமான்னு முடிவு பண்ணிக்கோ" - கர்ஜித்து சென்றான்.
இரண்டு நாட்கள் ஓடியது. வகுப்பறையில் நண்பனும் அவளும் பேசிக்கொள்வதாக தெரியவில்லை. அவனுக்கு உள்ளுர சந்தோஷமாக இருந்தது. என்றாலும் அவர்களை பிரித்தது தப்போ என்று தோன்றியது. நண்பனின் வாடிய முகம் அவனையும் வருத்தியது.
முடிவ்வெடுதவனாய் அவளிடம் சென்றான். " உன்கிட்ட கொஞ்சம் பேசணும். class முடிஞ்சதும் wait பண்ணு." சொல்லிவிட்டு நகர்ந்தான். "டேய் என்னடா பேச போற. இன்னும் எதுவம் குட்டைய்ய குழப்பாத, please. " கெஞ்சினான் நண்பன். அவனை ஒருமுறை உற்று பார்த்துவிட்டு சென்றான் அவன்.
மாலை, அவள் வகுப்பறையில் காத்திருந்தாள். " உனக்கு அவன் எப்படின்னு எனக்கு தெரியாது, ஆனா அவன் எனக்கு more than a friend. I;m bit possesive when it comes to my friendship. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் போய் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனா என்னால அவன் கஷட்டப்படுறதை நான் விரும்பல. நான் எதாச்சும் தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சுடு." சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றான்.
" டேய். thanks -டா. எனக்கு நீங்க இரண்டுப் பேருமே ஒன்னு தான் " நன்றி சொல்லிகொண்டிருந்த நண்பனை புறம் தள்ளி ஏதோ உணர்ந்தவனாய் hostel- லை நோக்கி ஓடினான்.
" Hello! சாரி அக்கா ! "பேச முடியாமல் அழுதான் அவன். "டேய் ஏன்டா அழற ஒண்ணும் இல்லடா ராஜா. விடு நீ தான சண்டை போட்ட. அழாதே. நீ பேசியதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." போனில் சமாதானம் சொன்னாள் அவன் அக்கா.