Saturday, March 28, 2009

புரிஞ்சிக்கவே மாட்டேன்கிறாங்களே !

ட்ரிங் ட்ரிங் .... ட்ரிங் ட்ரிங் .... ( அம்மா ஏன் caller tune செட் பண்ண மாட்டேன்கிறாங்க )
ஹலோ..
ஹலோ.. நான் தான்ம்மா ...
தெரியுதுடா.. அதான் போன்ல நம்பர் தெரியுதே !
குசும்புதான்... என்ன போன வேலை முடிஞ்சுதா? 
ஆங் ... இன்னைக்கு போய் passport ஆபீஸ்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடோம்.  ரெண்டு நாளுல கைக்கு வந்துடும்.. அப்புறமா கிளம்பி வரோம்..
சரி அப்புறம் வேற என்ன விஷயம்...
ரெண்டு ஜாதகம் வந்துச்சு...
கட்... டொய்ன் ...டொய்ன்...

இன்னொரு சந்தர்பத்தில்...
குட்டி என்ன பன்னுது..
விரல் சூபுது.. எதாச்சும் பேசு...
(போனை குழந்தையின் காதில் வைத்தாள்) . " அம்மு குட்டி.. ஆ சொல்லு..  ஆ...ஆ...ஆமா..சொல்லு.."
டேய் என்ன உன் குரல் கேட்டு சிரிக்குது :)
சிரிகுதா? ... சரி அப்புறம்.. எப்போ வரீங்க?
திங்ககிழமை மதியம் வரோம்.. மாமா கிட்ட டிக்கெட் புக் பண்ண சொல்லியாச்சு.. passport வந்தவுடன கிளம்பி வாரோம்..
அப்புறம்?
அதான் அந்த ஜாதகம் வந்திருக்கு...
கட்... டொய்ன்.. டொய்ன்...

கத்தியாச்சு.. கட் பண்ணியாச்சு.. இன்னும் கூட புரிஞ்சிக்காம.. கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிகோணு டார்ச்சர் பண்ணா என்ன அர்த்தம் ? :(