Friday, December 11, 2009

பூங்கொத்து

இருபத்தி ஓராவது தடவையாக இன்று மகதீரா படம் பார்த்தேன். முன் பாதியை விட பின் பாதி குறிப்பாக கால பைரவன் - ஷேர் கான் யுத்த காட்சிகள் மிகவும் அருமை. அதுவும் கம்பீரத்தோடு கால பைரவன் சவால் விடும் கட்சிகளில் தெரியும் உணர்ச்சி ஒரு நேர்த்தியான நடிகனை அறிமுகபடுத்தி இருக்கிறது.

ஒரு வசனம் வெற்றி பெற இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, வலுவான காட்சி அமைப்பு, மற்றொன்று வசன modulation . எனகென்னமோ இன்றைய நடிகர்கள் சரியாக வசனம் பேச முயற்சிக்க வில்லையோ என்று தோன்றுகிறது. நம் தமிழ் திரை உலகில் வசனத்துக்காக வெற்றி பெற்ற படங்கள் மிக குறைவு. அதுவும் சமீபத்தில் அப்படி ஒன்று வந்ததாக நினைவிலேயே இல்லை.

இன்னும் எதனை நாளைக்கு நாம் கலைஞரின் மனோகரவையும், பராசக்தியையும் சொல்லி கொண்டு இருக்க போகிறோம்? சிவாஜி படங்களில் அவர் கொடுக்கும் வாய்ஸ் modulation ரொம்ப பிரசித்தி பெற்றது. அதற்கு பிறகு, கமல்ஹாசன், குறிப்பாக பாக்யராஜ் அவர்கள் தன்னுடைய படங்களில் வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்றைய நடிகர்களை modulation கொடுத்து பேச சொன்னால் ஏய்.. ஏய்... ஏய்.. என்று கத்த மட்டுமே தெரிகின்றது

**************************************
இந்த முறை சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் 30 முதல் ஜனவரி 11 வரை நடை பெற போகிறது. ஏன் இந்த திடீர் மற்றம் என்று புரிய வில்லை. முன்பு பொங்கல் விடுமுறையோடு வைத்தால் சென்னை-கு இரண்டு நாட்கள் வந்து புத்தக கண்காட்சி சென்று வர ஏதுவாக இருந்தது. இப்படி முன்பே வைத்தால், எப்படி plan பன்னுவது என்றே தெரிய வில்லை. May be I can search for some book on this in the fair ;)

There is a big list to be prepared... If you guys have any recommendations do let me know.. Will try to accommodate in my list.

**************************************
சில பாடல்கள், தனுஷு சொல்வது போல கேக்க கேக்க தான் பிடிக்குது. அந்த வகைல.. வேட்டைகரனில் இருந்து ஒரு சின்ன தாமரை பாடல் மிகவும் பிடித்து தான் போய்விட்டது.



Saturday, March 28, 2009

புரிஞ்சிக்கவே மாட்டேன்கிறாங்களே !

ட்ரிங் ட்ரிங் .... ட்ரிங் ட்ரிங் .... ( அம்மா ஏன் caller tune செட் பண்ண மாட்டேன்கிறாங்க )
ஹலோ..
ஹலோ.. நான் தான்ம்மா ...
தெரியுதுடா.. அதான் போன்ல நம்பர் தெரியுதே !
குசும்புதான்... என்ன போன வேலை முடிஞ்சுதா? 
ஆங் ... இன்னைக்கு போய் passport ஆபீஸ்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடோம்.  ரெண்டு நாளுல கைக்கு வந்துடும்.. அப்புறமா கிளம்பி வரோம்..
சரி அப்புறம் வேற என்ன விஷயம்...
ரெண்டு ஜாதகம் வந்துச்சு...
கட்... டொய்ன் ...டொய்ன்...

இன்னொரு சந்தர்பத்தில்...
குட்டி என்ன பன்னுது..
விரல் சூபுது.. எதாச்சும் பேசு...
(போனை குழந்தையின் காதில் வைத்தாள்) . " அம்மு குட்டி.. ஆ சொல்லு..  ஆ...ஆ...ஆமா..சொல்லு.."
டேய் என்ன உன் குரல் கேட்டு சிரிக்குது :)
சிரிகுதா? ... சரி அப்புறம்.. எப்போ வரீங்க?
திங்ககிழமை மதியம் வரோம்.. மாமா கிட்ட டிக்கெட் புக் பண்ண சொல்லியாச்சு.. passport வந்தவுடன கிளம்பி வாரோம்..
அப்புறம்?
அதான் அந்த ஜாதகம் வந்திருக்கு...
கட்... டொய்ன்.. டொய்ன்...

கத்தியாச்சு.. கட் பண்ணியாச்சு.. இன்னும் கூட புரிஞ்சிக்காம.. கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிகோணு டார்ச்சர் பண்ணா என்ன அர்த்தம் ? :(